இறுதிக்கட்டப் போரில் விடுதலைப்புலிகள் தலைவர்களைக் காப்பாற்ற முயற்சித்த அமெரிக்கா : பரபரப்பு தகவல்கள்

Posted by Kavi Kavi
Options
இறுதிக்கட்டப் போரில் விடுதலைப்புலிகள் தலைவர்களைக் காப்பாற்ற முயற்சித்த அமெரிக்கா : பரபரப்பு தகவல்கள்

இலங்கையின் இறுதிக்கட்டப் போரில் விடுதலைப்புலிகளின் தலைவர்களைக் காப்பாற்ற அமெரிக்கா முயற்சித்த பரபரப்பு தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.

இலங்கை போர் உச்சகட்டத்தை எட்டியிருந்தபோது, ராணுவ வெற்றியை புலிகளால் தடுத்து நிறுத்த முடியாது என்பதை அமெரிக்கா உணர்ந்து கொண்டதாக த ஐலேண்டு என்னும் பத்திரிகை வெளியிட்டுள்ள கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகளின் முக்கிய தலைவர்களான பிரபாகரன், பொட்டு அம்மான் மற்றும் சூசை ஆகியோரையும், அவர்களது குடும்பத்தினர் உள்ளிட்ட 100 பேரையும் காப்பாற்ற இலங்கைக்கான அப்போதைய அமெரிக்க தூதர் ராபர்ட் பிளேக் முயற்சிகள் மேற்கொண்டதாக அதில் கூறப்பட்டுள்ளது. இதற்காக ஹவாய் நாட்டில் இருந்து தனி விமானம் ஒன்று இலங்கைக்கு வந்ததாகவும் அப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இலங்கை அரசு, சில ராஜதந்திர யுக்திகளைப் பயன்படுத்தி அத்திட்டம் நிறைவேறாமல் தடுத்துவிட்டதாகவும் அதில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது..