பருத்தித்துறையில் சுனாமி எச்சரிக்கை ஒத்திகை; சுப்பர்மடப் பகுதி மக்கள் பதறியடித்து ஓடினர்!

Posted by Kavi Kavi
Options
பருத்தித்துறை, சுப்பர் மடத்தில் உள்ள சுனாமி முன்னெச்சரிக்கை கோபுரப்பகுதியில் நேற்றுப் பிற்பகல் 3 மணிக்கு பாசாங்கு எச்சரிக்கை மேற்கொள்ளப்பட்ட போது,

அப்பிரதேச மக்கள் பதறியடித்து அல்லோலகல்லோலப்பட்டு பாடசாலையை நோக்கி ஓடினர். யாழ். செயலக அனர்த்த முகாமைத்துவப் பிரிவினரின் ஏற்பாட்டில் சுனாமி முன்னெச்சரிக்கையாக பாசாங்கு எச்சரிக்கை, போலி நடிப்புப் பயிற்சி ஆகியன தொடர்பான ஒத்திகை இடம்பெற்றது.

இந்த ஒத்திகையின் போது மீண்டும் சுனாமி வந்து விட்டதோ என்று கருதிய அந்தப் பிரதேசப் பொதுமக்கள், வயோதிபர்கள், குழந் தைகளுடன் இடம்பெயர்ந்து வடமராட்சி மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலையை நோக்கி ஓடினர்.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றநிலை ஏற்பட்டது. சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை என அரச அதிகாரிகள் அவர்களுக்கு விளக் கியதையடுத்து அமைதி நிலை ஏற்பட்டது மக்கள் இருப்பிடங்களுக்குத் திரும்பினர். இந்த நிகழ்வில் யாழ். அரச அதிபர் கே.கணேஷ், பிரதேச செயலர் ஆர்.வரதீஸ் வரன் ஆகியோர் கலந்துகொண்டனர்