இடம்பெயர்ந்த ஈழ மக்களுக்கு கெட்டுப்போன அரிசி!

Posted by Kavi Kavi
Options
யாழ்ப்பாணத்தில் உள்ள இடம்பெயர்ந்த மக்களுக்கும், நலிவுற்ற மக்களுக்கும் நிவாரணமாக இலங்கை அரசால் வழங்கப்படும் அரிசி கெட்டுப்போனதாக உள்ளதாகவும், அதை மக்கள் சமைத்துச் சாப்பிட முடியாது எனவும் அங்குள்ள தொண்டு நிறுவனங்கள் கவலை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அரிசியை கொள்முதல் செய்து யாழ்ப்பாணத்திற்கு அனுப்புவது அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் என்றும், கொழும்பிலிருந்து அனுப்புவதைத் தான் தாங்கள் விநியோகிக்க முடியும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

யாழ் மக்களில் சுமார் 60 விழுக்காட்டினர், அரசு வழங்கும் நிவாரணத்தில் தான் தங்கியுள்ளனர். அரசு வழங்கும் அரிசி, மாவு, சீனி, பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் போன்றவை மக்களுக்கு மிகவும் அத்தியாவசியமானவை.

ஆகவே இவ்வாறு கெட்டுப்போன பொருட்கள் வழங்கப்படுவதால் பல இடங்களில் அவற்றை வேண்டாம் என மக்கள் நிராகரித்து தமக்கு பயன்படுத்துவதற்கு ஏற்ற பொருட்களை வழங்குமாறு கேட்டுள்ளனர்.