வவுனியா இடைதங்கல் முகாம்கள் விரைவில் மூடப்படவுள்ளது

Posted by Kavi Kavi
Options
வவுனியா மெனிக் பாம் அகதிமுகாம்கள் வெகுவிரைவில் மூடுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள்துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இடம்பெயர்ந்தோர் அனைவரும் எதிர்வரும் ஜனவரி 31 ஆம் திகதி மீள்குடியமர்த்தப்படவுள்ள நிலையில், இந்த முகாம்கள் மூடப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது மெனிக் பாமில் 80 ஆயிரம் பேரே இடம்பெயர்ந்த நிலையில் தங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.கடந்த வியாழக்கிழமையன்று சுதந்திர நடமாட்டத்திற்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் அதில் 80 ஆயிரம் பேரே முகாம்களுக்கு திரும்பினர். இதில் 72 ஆயிரம் பேர் தமது உறவினர்களின் வீடுகளுக்கு சென்று திரும்பினர் என்றும் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.