குமரன் பத்மநாதன் விரைவில் ஊடக சந்திப்பொன்றில் கலந்து கொள்வார் : லக்பிம

Posted by Kavi Kavi
Options
பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் விரைவில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொள்ள உள்ளதாக லக்பிம பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

எதிர்வரும் வாரமளவில் குமரன் பத்மநாதன் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொள்வார் என பாதுகாப்பு அமைச்சு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதல் தடவையாக இவ்வாறான ஓர் ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

புலம்பெயர் தமிழர்களிடம் பணம் திரட்டப்பட்டவிதம், கப்பம் கோரப்பட்ட விதம் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்த தகவல்களை அவர் அம்பலப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.