எதிர்பாராத அரசியல் திருப்பமொன்று விரைவில் ஏற்படும் : கயன்த கருணாதிலக்க

Posted by Kavi Kavi
Options
அரசாங்கம் சற்றும் எதிர்பாராத பாரிய அரசியல் திருப்பமொன்று விரைவில் ஏற்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கயன்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மிக முக்கியமான சிலர் ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவளிப்பார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சிகளின் பொதுவான வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவளிக்கும் வகையில் இவர்கள் விரைவில் எதிர்க்கட்சி தேர்தல் பிரச்சார மேடைகளில் ஏறுவார்கள் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இவ்வாறு எதிர்க்கட்சியுடன் இணைந்து கொள்ள இருப்பவர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்படமாட்டாது என்ற போதிலும், விரைவில் அவர்களை எதிர்க்கட்சி மேடைகளில் பார்க்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.