தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஜெனரல் சரத் பொன்சொகவிற்கு ஆதரவு

Posted by Kavi Kavi
Options
தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஜெனரல் சரத் பொன்சொகவிற்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளது.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் தம்மர அமில தேரார் தமது கட்சி எதிர் வரும் ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளார்.

சங்கள பௌத்த Nதிசயவாத கட்சியாக அடையாளம் காணப்பட்டுள்ள தேசப்பற்றுள்ள தேசிய இயக்கமானது பெரும்பான்மையிய சங்கள மக்கள் மத்தியியல் தீவிர இனவாதத்தையும் மதவாதத்தையும் பரப்பி வருகின்ற முக்கிய கட்சி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கட்சியின் ஆதரவு சரத் பொன்சேகாவிற்கு கிடைத்துள்ளதன் மூலம் சிங்கள பௌத்த தேசிய வாதிகளின் ஆதரவும் சரத் பொன்சேகாவிற்கு கிடைக்கும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.