ஜனாதிபதி தனது உரைகளை நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி வெளியிட்டு வருவதை வெளிப்படுத்த வேண்டாம் -அரசாங்கம் எச்சரிக்கை

Posted by Kavi Kavi
Options
ஸ்ரீலங்கா ஜனாதிபதி தனது உரைகளை நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி வெளியிட்டு வருவதை வெளிப்படுத்தும் விதமான செய்தி ஒளிபரப்பை மேற்கொள்ள வேண்டாம் என சிரச தொலைக்காட்சி நிர்வாகத்திற்கு அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஜனாதிபதி தனது உரைகளை ஒளிரம் திரையில் பார்த்து வாசித்து வருகின்றார் இதனால் அவரது உரைகள் சிறப்பானதாக அமைந்து வருகின்றன.

அவரது உரையை பார்பவர்கள் ஜனாதிபதி சிறப்பாக உரையாற்றுவதாக எண்ணி வருகின்றனர்.

அதேபொல் மகிந்த ராஜபக்ச தமிழில் உரையாற்றுவதற்கும் அதே தொழில் நுட்பத்தை பயன்படுத்தி வருகின்றார்.

ஜனாதிபதி உரையாற்றும் இடத்தில் இரு பக்கத்திலும் வைக்கப்பட்டுள்ள ஒளிர் திரைகளை மறைத்து அரச ஊடகம் ஒளிப்பதிவினை மேற்கொண்டு வருகின்றது.

எனினும் அண்மையில் சிரச தொலைக்காட்சி தமது செய்தியறிக்கையில் ஜனாதிபதி இந்த ஒளிர் திரையை பாhத்து உரையாற்றும் காட்சிகள் ஒளிபரப்புச் செய்யப்பட்டுள்ளன.

இதனை அடுத்து ஜனாதிபதி செயலகத்தின் முக்கிய அதிகாரி ஒருவர் சிரச நிர்வாகத்தை தொடர்பு கொண்டு தமது பிரிவினால் வழங்கப்படாத எந்த ஒரு காணொளிக் காட்சியினையும் ஒளிபரப்ப வேண்டாம் என்று எச்சரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.