வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த மனைவியின் மரணச் சான்றிதழை கண்ணீர் மல்கப் பெற்றார் கணவன்

Posted by Kavi Kavi
Options
வன்னியில் இடம்பெற்ற யுத்தத்தில் காயமடைந்த, காணாமற்போன தனது மனைவியை கண்டுபிடித்துத் தருமாறு யாழ்.மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அலுவலகத்தில் முறைப்பாட்டினைச் செய்த கணவர் மனைவியின் இறப்புத் தொடர்பான மரணச் சான்றிதழை கண்ணீர் மல்க சோகத் தோடு பெற்றுச் சென்றுள்ளார்.

வன்னியில் இடம்பெற்ற யுத்தம், இடப் பெயர்வு என்பவற்றில் சிக்குண்டு காயம டைந்த தனது மனைவியான (நாகேஸ் வரி34) வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் பதவியா வைத் தியசாலைக்கு மாற்றம் செய்யப்பட்டதாக வும்,
அவர் தொடர்பான விவரங்களைப் பெற் றுத் தருமாறும் அவரது கணவரான கந் தையாரவிகரன் என்பவர் கடந்த நவம்பர் மாத முற்பகுதியில் யாழ். மனித உரிமை கள் ஆணைக்குழுவின் அலுவலகத்தில் முறைப்பாட்டினைச் செய்திருந்தார்.

யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழு வினர் மேற்கொண்ட துரித விசாரணையின் பிரகாரம் நாகேஸ்வரி பதவியா வைத்திய சாலையில் இறந்து போனதாகவும் அவரது உடல் அரச செலவில் அடக்கம் செய்யப் பட்ட தாகவும் கூறி அது தொடர் பான மரணச் சான் றிதழ் யாழ்.மனித உரிமைகள் ஆணைக் குழுவின் அலுவல கத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது.

இறந்தவரின் கணவரான கந்தையா ரவிகரன் யாழ். மனித உரிமைகள்  ஆணைக் குழுவின் அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் வருகை தந்து மிகுந்த சோகத்துடனும் கண்ணீருடனும் தனது மனைவியின் மரணச்சான்றிதழைப் பெற்றுச் சென்றுள் ளார்.காணாமல்போன தனது மனைவி மீண்டும் கிடைக்கவேண்டும் என்ற எதிர் பார்ப்புடன் மனித உரிமைகள் ஆணைக் குழுவிடம் முறைப்பாட்டினைச் செய்தி ருந்தார்.