பொன்சேகாவின் தேர்தல் பிரசாரத்துக்கு சென்று வீடு திரும்பியோர் மீது தாக்குதல்

Posted by Kavi Kavi
Options
மாவனல்ல நகரில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் கூட்டணியின் பொது வேட்பாளர் சரத் பொன்சேகாவின் கூட்டத்துக்கு வந்து விட்டு திரும்பி வீடு நோக்கிச் சென்றவர் கள் மீது அரநாயக்க வீதியில் மூன்று இடங் களில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள் ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

ஜெனரல் சரத் பொன்சேகாவின் ஊடக வியலாளர்களை ஏற்றிச் சென்ற வானை யும், ஜீப் வாகனத்தையும் வழிமறித்த கோஷ்டியினர் தொடுத்த தாக்குதலில் ஊடகவியலாளர்கள் சிறு காயங்களுக்குள் ளானார்கள்.
இந்தச் சம்பவத்தைப் பார்வையிட ஐக் கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு நாடா ளுமன்ற உறுப்பினர் லலித் திஸாநாயக்க வந்த போது இனந்தெரியாதோர் அவரது ஜீப் கண்ணாடியை உடைத்துள்ளனர் என வும் கூறப்படுகின்றது.

விசாரணைகளை மேற்கொண்ட மாவனெல்ல பொலிஸார் அவர்களைக் கைது செய்து விசாரணைகளின் முடிவில் பொலிஸ்  பிணையில் அவர்களை விடு வித்தனர் மேலதிக விசாரணைகள் தொடர் கின்றன எனவும் கூறப்படுகின்றது.