இலங்கை கிரிக்கட் வீரர்கள் இந்தியாவில் முறைகேடாக நடந்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Posted by Kavi Kavi
Options
இலங்கை கிரிக்கட் அணியின் வீரர்கள் கடந்த தினம் ஒன்றில் இந்தியாவில் முறைகேடாக நடந்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பில் இலங்கை  கிரிக்கட், கிரிக்கட் அணியின் முகாமையாளரின் அறிக்கையை எதிர்ப்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கட்டின் தலைவர் டி எஸ் டி சில்வா, இது தொடர்பில் தகவல் அளிக்கையில் தாம் கிரிக்கட் அணியின் முகாமையாளர் பிரன்டன் குருப்புவின் அறிக்கையை எதிர்ப்பார்த்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கட் அணிக்கு பாகிஸ்தானில் கடந்த சில மாதங்களிற்கு முன் நடைபெற்ற தாக்குதல் காரணமாக அவர்களுக்கு பாதுகாப்பு பலமடங்கு அதிகரித்திருந்த நிலையிலும் அதை மீறி அணியினர் முறைகேடாக நடந்துள்ளனர்.

இலங்கை அணியின் சனத் ஜெயசூரிய மற்றும் டில்ஷான் ஆகிய இருவரும் கல்கத்தாவின் இரவு கேளிக்கை இடம் ஒன்றுக்கு தமது பாதுகாப்பையும் மீறிச்சென்றதாக பாதுகாப்பு அதிகாரிகள் சார்பில் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இவர்கள் இரவு 11 மணிக்கு தமது ஹோட்டல்களுக்கு திரும்பவேண்டும் எனக்கோரப்பட்ட போதும் அதிகாலை 2 மணிக்கே திரும்பியதாக இந்திய தகவல்கள் தெரிவித்திருந்தன.