அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட இராணுவத் தளபதிகள் இலங்கையிடம் பயிற்சிகளைக் கோரியுள்ளனர்

Posted by Cine Gallery Cine Gallery
Options
அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட பத்து நாடுகளின் இராணுவத் தளபதிகள் இலங்கை இராணுவத்திடம் பயிற்சிகளை பெறக் கோரியுள்ளதாக லங்காதீப பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
 
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை  இலங்கை இராணுவம் எவ்வாறு இல்லாதொழித்தது என்பது குறித்து ஆராயும் நோக்கில் குறித்த இராணுவத் தளபதிகள் இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர்.
 
ஆசிய பசுபிக் நாடுகளது இராணுவத் தளபதிகள் கலந்து கொண்ட விசேட மாநாட்டில் கலந்து கொண்ட போது, தம்மிடம் இந்தக் கோரிக்கைகள் விடுக்கப்பட்டதாக இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
 
ஜப்பானிய தலைநகர் டோக்கியோவில் கடந்த 24ம் திகதி முதல் 27ம் திகதி வரையில் இந்த மாநாடு நடைபெற்றது.
 
இலங்கையில் பயங்கரவாதத்தை இல்லாதொழித்தமைக்காக  சகல நாடுகளும் இலங்கைக்கு பாராட்டு தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.