பயங்கரவாதத்தின் ஆவிகள் வெளிநாடுகளில் இருந்து தொடர்ந்தும் அச்சுறுத்தி வருகின்றன

Posted by muhiloosai muhiloosai
Options
இலங்கை பயங்கரவாதத்தை தோற்கடித்துள்ள போதிலும், பயங்கரவாதத்தின் ஆவிகள் வெளிநாடுகளில் இருந்து தொடர்ந்தும் அச்சுறுத்தி வருவதாக ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி கலாநிதி பாலித கோஹோன தெரிவித்துள்ளார். கண்டி அஸ்கிரிய மல்வத்தை மாநாயக்க தேரரை நேற்று சந்தித்து ஆசிப் பெற்ற போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
 
வெளிநாடுகளில் இருந்து அச்சுறுத்தி வரும் இந்த பயங்கரவாத ஆவிகளின் நிழல்களை தோற்டிக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். வெளிநாடுகளில் உள்ள விடுதலைப்புலிகளை தோற்டிக்கும் நோக்கில் ஐக்கிய நாடுகள் சபையில் குரல் எழுப்ப தான் பின்நிற்க போவதில்லை எனவும் பாலித கோஹோன குறிப்பிட்டுள்ளார். விடுதலைப்புலிகளுக்கு சார்பான பிரிவினர் தற்போதும் சில நாடுகளில் இருக்கின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.