இலங்கை தேசீயக் கொடி எரிப்பு. மீண்டும் வெடிக்கும் வழக்கறிஞர்கள் போராட்டம்

Posted by muhiloosai muhiloosai
Options
இலங்கையில் தமிழ் இளைஞர்களை நிர்வாணப்படுத்தி கண்களைக் கட்டி சுட்டுக் கொல்கிற வீடியோக்கள் வெளியாகி உலகெங்கிலும் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் தமிழகத்தில் ஆங்காங்கே இலங்கை அரசிற்கு எதிரான போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

 
நேற்று தஞ்சையில் தமிழ்த் தேச பொது உடமைக் கட்சியின் சார்பில் கண்டனப் பேரணி நடைபெற்றதோடு தமிழகம் முழுக்க ஆர்ப்பாட்டங்கள் நடந்து பல்வேறு சிறு சிறு தமிழ் அமைப்புகள் இலங்கை அரசிற்கு எதிராக போராட்டங்களை துவங்கியிருக்கும் நிலையில் இலங்கை ராணுவத்திற்கு தங்களது கண்டனத்தை தெரிவிக்கும் வகையில் கரூர் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் இலங்கை வழக்கறிஞர் சங்க துணைத் தலைவர் ரமேஷ் தலைமையில், வழக்கறிஞர்கள் செயலாளர் நடேசன், இராஜேந்திரன், நன்மாறன் முன்னிலையில் இலங்கை தேசிய கொடியை செருப்பால் அடித்து தீ வைத்து கொழுத்தி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
 
இதில் 100 க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் சென்னையில் உள்ள இலங்கையின் துணைத்தூதரகம், சென்னை ஸ்பென்சர் பிளாசாவில் உள்ள இலங்கை அரசிற்குச் சொந்தமான வணிக நிறுவனம், லங்கா ஏர்லைன்ஸ், சென்னை எழும்பூரில் உள்ள பௌத்த மடாலயன் உள்ளிட்ட இடங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருக்கிறது.