இலங்கையில் விரைவாக அதிகாரப் பகிர்வு முன்வைக்கப்பட வேண்டும் - ரொபேட் ஓ பிளாக்

Posted by muhiloosai muhiloosai
Options
இலங்கையில் விரைவாக அதிகாரப் பகிர்வு முன்வைக்கப்பட வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து இந்திய ஊடகவியலாளர் சந்திப்பில் மத்திய மற்றும் தென் ஆசிய நாடுகளுக்கான அமெரிக்க பிரதி இராஜாங்கச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளக் கூறியுள்ளார்.

இலங்கையில் விரைவாக அதிகாரப் பகிர்வு முன்வைக்கப்பட வேண்டும்.இவ் அதிகாரப் பகிர்வானது  தமிழ் மக்களின் அபிலாசைகளை உறுதி செய்யப்படும் வகையில் அமைய வேண்டும்.அதிகாரப் பகிர்வே இலங்கை தமிழர்களுக்கு வழங்க கூடிய ஒரே தீர்வு. 13வது திருத்தச் சட்டத்தின் கீழான அதிகாரப் பகிர்வே இலங்கைக்கு காணப்படும் ஒரே தீர்வு எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.

மனிதாபிமான விடயம் மற்றும் அதிகாரப் பகிர்வு ஆகிய இரு விடயங்களில் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க அமெரிக்கா தயாராக உள்ளது எனக் கூறியுள்ளார்.

வவுனியா தடுப்பு முகாங்களில் உள்ள 250,000த்திற்கும் மேற்பட்ட அப்பாவி மக்களின் சுதந்திர நடமாட்டம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த வருட இறுதிக்குள் இடம்பெயர் மக்களை அவர்களில் வாழ்விடங்களில் மீளக் குடியமர்த்துவதாக இலங்கை அரசாங்கம் வழங்கிய உறுதி மொழியை வரவேற்கின்றோம் எனக் தெரிவித்துள்ளார்.

தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டோர் அனைத்துலுக சட்ட நியமங்களுக்கு அமைவான தரத்தில்  நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மனிதாபிமான பணிகளை தொடர சிறீலங்கா அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும் எனச் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நிறைவடையும் வரையில் அதிகாரப் பகிர்வு மேற்கொள்ளப்பட மாட்டாது போன்ற ஜனாதிபதி வெளியிட்டிருந்த அறிக்கை தொடர்பில் கவலை அடைவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.