நிறைவேற்று அதிகார முறைமை குறித்து விளக்கமளிப்பதற்கு லக்ஷ்மன் யாப்பாவுக்கு அருகதையில்லை – அநுரகுமார:

Posted by muhiloosai muhiloosai
Options
நிறைவேற்று அதிகார முறைமை குறித்து விளக்கமளிப்பதற்கு லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவிற்கு அருகதையில்லை என ஜே.வி.பி குற்றம் சுமத்தியுள்ளது.
 
கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போது அக்கட்சியின் பாராளுமன்ற  குழு தலைவர் அநுரகுமார திஸ்ஸநாயக்க இந்த குற்றச்சாட்டினை முன்வைத்தார்.
 
இந்த ஊடகவியலாளர் மாநாட்டில்  அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான விஜித்த ஹேரத், வருண ராஜபக்ஷ ஆகியோரும் கலந்து கொண்டனர்.
 
இங்கு அவர் தொடர்ந்து  கருத்து தெரிவிக்கையில் நிறைவேற்று ஜனாதிபதி முறைமை குறித்து கருத்து தெரிவிப்பதற்கு அமைச்சர் லகடஷ்மன் யாப்பா அபேவர்தனவிற்கு அருகதை கிடையாது.
 
நிறைவேற்று அதிகாரம் குறித்து நாங்கள் கேள்வி கேட்க அறுகதையற்றவர் என அவர் தெரிவித்துள்ளார் இந்த கருத்தினை தெரிவிக்கவே அவருக்கு அருகதை கிடையாது.
 
அப்போது எதிர்கட்சி வரிசையில் அமர்வதற்காகவே மக்கள் இவரை தெரிவு செய்தனர். ஆனால் அதை மறந்து அரசாங்கத்தின் சலுகைகளை பெற்று வாழும் இவர் இந்த கருத்தினை  தெரிவிக்க தகுதியற்றவர்.
 
மஹிந்த சிந்தனைபடியே நாம் நிறைவேற்று அதிகார முறைமையை இரத்து செய்யுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியிருந்தோம். அன்று மஹிந்த சிந்தனை வெளிவரும் போது  எதிர்கட்சியாசனத்திலிருந்த இவர் தற்போது இது பற்றி பேசக்கூடாது. இவர் மஹிந்த சிந்தனை புத்தகத்தை படித்திருப்பாரா? ஆதில் என்ணென்ன விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கிறது என இவருக்கு தெரியுமா? இதையெல்லாம் மறந்து அவர் தற்போது நிறைவேற்று அதிகாரம் குறித்து கதைப்பதற்கு எங்களுக்கு அருகதையில்லை என்று கூறியுள்ளார் எனவும் அவர் குறிப்பிட்டாh