கே.பியை சி.பி.ஜ விசாரிக்கும் எனச் செய்திகள் வெளியாகியுள்ளன

Posted by muhiloosai muhiloosai
Options
அடுத்தமாதம்(செப்டெம்பர்) இந்திய புலனாய்வுத் துறையான சி.பி.ஜ இலங்கை சென்று குமரன் பத்மநாதனை விசாரிக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தேடப்பட்டு வருவதாகக் கூறப்படும் கே.பியை தாம் விசாரிக்கவேண்டும் என ஏற்கனவே சி.பி.ஜ விடுத்த கோரிக்கை இலங்கை அரசால் நிராகரிக்கப்பட்டிருந்தது. தற்போது அது ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதால் அடுத்த மாதம் நடுப்பகுதியில் இந்திய அதிகாரிகள் இலங்கை செல்லவுள்ளனர்.
 
அத்துடன் கே.பியை இந்தியாவுக்கு நாடுகடத்துவது குறித்து இந்திய அதிகாரிகள் இரகசியப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும் அறியப்படுகிறது. எஸ்.எம். கிருஷ்ணா, எம். நாராயணன் உட்ப்பட பல முக்கிய இந்திய அதிகாரிகள் இது குறித்து இலங்கை அரசுடன் அலோசித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது இவ்வாறிருக்க கே.பியை தற்போது பாரிய சித்திரவதைக்கு உள்ளாக்கும் நடவடிக்கையில் இலங்கை அரசு ஈடுபட்டுள்ளதாவும் தகவல்கள் கசிந்துள்ளன.
 
பனாகொடை முகாமில், "யூனிட் கோத்தபாய" என்றழைக்கப்படும் மிகவும் இரகசியமான இடம் ஒன்றில் கே.பி வைக்கப்பட்டுள்ளதாக ஊர்ஜிதமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. முகாமின் இப்பகுதி மிகுந்த பாதுகாப்புடன் காணப்படுவதாகவும், மின்சாரம் மூலம் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படும் கருவிகள் சமீபத்தில் இம் முகாமுக்கு கொன்டுசெல்லப்பட்டதாகவும், சில ஊர்ஜிதமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.