எங்களுக்கு அபிவிருத்தி தேவை இல்லை எங்களுக்கு தேவை எமது உரிமையே - தடுப்பு முகாமில் இருக்கும் ஓர் வயோதிப தாய்

Posted by muhiloosai muhiloosai
Options
எங்களுக்கு அபிவிருத்தி தேவை இல்லை எமக்கு தேவை எமது உரிமை” இவ்வாறு வலயம் இரண்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஓர் வயோதிப தாய் உரத்து சத்தமிட்டார் என ஒபெரேசன் யு.எச்.ஏ என்ற அமெரிக்க தன்னார்வ நிறுவனத்தின் ஆசிய இணைப்பாளர் செல்வி நிம்மி கெளரி நாதன் அவர்கள் தனது முகாம் அனுபவம் பற்றி எழுதிய குறிப்பில் வெளிப்படுத்தியுள்ளார். வலயம் 2 முகாமிற்கு தன்னார்வ நிறுவனம் ஒன்று மலசல கூடத்தினை பொருத்துவதற்கு சென்ற போது இந்த தாய் இவ்வாறு உரத்து சத்தமிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தனது குறிப்பில்: இந்த வயோதிப தாயின் குரல் உண்மையில் யாராவது ஐக்கிய நாடுகள் அல்லது இலங்கைக்கு உதவி வழங்கும் கொடையாலர்களுக்குதான் போய் சேர்ந்திருக்கவெண்டும். ஏனெனில் அபிவிருத்தி மூல மக்களின் பிரச்சினைகள் தீர்ந்துவிடும் என நினைப்பவர்களுக்கு இத்தகைய செய்திகள் முக்கியமானது.

அரசாங்கம் தனது சொந்த நலன்களுக்காக மக்களை தடுத்து வைத்திருக்கின்றது. ஓர் சிறிய இடத்திற்குள் இருந்து மக்களை பலாத்காரமாக இடம்பெயர செய்து தற்போது எந்த விதமான அடிப்படை வசதிகளும் இன்றி, குடினீர், மலசல கூடம், கூட ஒழுங்காக இன்றி மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆனால்  அங்கு ஏ.ரி.எம் பணம் எடுக்கும் இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. அரசாங்கம் தடுத்து வைக்கப்படுள்ள மக்களை வைத்துக்கொண்டு எவ்வாறு  பணம் பெறலாம் என சிந்தித்து செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது. அதற்கு ஏற்றால் போல் நிதி வழங்குனர்களும் செயற்பட்டுகொண்டிருக்கின்றனர்.

மக்கள் நம்பிக்கை இழந்தவர்களாகவே காணப்படுகின்றனர். அவர்களுக்கு யாரிலும் எந்தவித நம்பிக்கையும் இல்லை, ஐ. நா நிறுவனகள் தான் எதாவது குரல்கொடுக்கமுடியும் என நம்புகின்றார்கள். ஆனால் ஐ. நா யுத்த கால இறுதியில் மெளனமாக இருந்தது என நோர்வேக்கான ஐ. நா தூதுவர் மோனா ஜூல் அண்மையில் குறிப்பிட்டு இருந்தார். ஐ. நா செயலரின் அதிகாரமும், குரலும் தமிழ் மக்கள் விடயத்தில் பிரசன்னமில்லாமல் இருக்கின்றது. இது ஏன்? ஒருவேளை தமிழ் மக்களின் குரல்  ஐ. நா விற்கு முக்கியத்துவம் இல்லாமல் போயிருக்கலாம். என தனது குறிப்பில் தெரிவித்துள்ளார்.