லியாம் பொக்ஸ் நேற்று இலங்கை வந்தார்

Posted by muhiloosai muhiloosai
Options
பிரித்தானிய கன்சர்வேட்டிவ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், வெளிவிவகார அமைச்சருமான லியாம் பொக்ஸ் நேற்று இலங்கை வந்துள்ளார்.

முன்னர் ஐக்கிய தேசிய கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றை ஏற்படுத்த காரணமாக இருந்தவர் இவர். பின்னர், அதேபோன்ற உடன்படிக்கையை ரணில் விக்ரமசிங்கவுக்கும், தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் ஏற்படுத்துவதற்குக் கடந்த வருடம் அவர் முயற்சிமேற்கொண்டிருந்த போதும் அது பலனளிக்கவில்லை.

அமைச்சர் மிலிந்த மொரகொட பிரித்தானியாவுக்குச் சென்று திரும்பியதன் பின்னர், இவர் அரசாங்கத்தின் அழைப்பின் பேரிலேயே இலங்கைக்கு வந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.