பாதாள உலகக் கோஷ்டித் தலைவர் உட்பட மூவர் சுட்டுக் கொலை

Posted by muhiloosai muhiloosai
Options
மற்றுமொரு முக்கிய பாதாள உலகக் கோஷ்டித் தலைவர் உட்பட மூவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பாஜி என்றழைக்கப்படும் நபரும் அவரது உதவியாளர்களான டோஜி மற்றும் சித்திக் ஆகியோரும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்கும், பாதாள உலகக் கோஷ்டியினருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலின் போது குறித்த மூவரும் துப்பாக்கிச் சுட்டுக்கு இலக்காகி உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிமால் மெதவக்க தெரிவித்துள்ளார்.

மாளிகாவத்தை பிரதேசத்தில் மேற்படி பாதாள உலகக் கோஷ்டியினர் பதுங்கியிருப்பதாகக் கிடைக்கப் பெற்ற தகவலை அடுத்து காவல்துறையினர் நடத்திய தேடுதலின் போது இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.