பசில் ராஜபக்ச மட்டும், பாராளு மன்றத்திற்கு வருவது உலங்கு வானூர்தியிலா? - அமைச்சர்கள் விசனம்

Posted by muhiloosai muhiloosai
Options
சிறிலங்கா ஜனாதிபதியின் சகோதரரும், அவரது ஆலோசகருமான பசில் ராஜபக்ச உலங்கு வானூர்தியில் நாடாளுமன்றத்திற்கு செல்வது தொடர்பாக ஆளும் கட்சியை சேர்ந்த பலர் அதிருப்தி அடைந்துள்ளதாக தெரியவருகிறது.

அண்மைக்காலமாக பசில் ராஜபக்சவுக்கு எதிரான முனைப்புக்களை மேற்கொண்டு வரும் கட்சிக்குள் முக்கிய பங்கு வகிக்கும் ஒருவர், பசில் தொடர்பாக, கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளதாகவும், அவருடன் இணைந்து சில, ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற லொபியில், இவ்வாகன சர்ச்சை குறித்து ரகசியமாக கலந்துரையாடியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன