களுவான்கேணியில் சுடப்பட்டவர் மீள்குடியேற்றவாசி எனத் தகவல்

Posted by muhiloosai muhiloosai
Options
மட்டக்களப்பு களுவான்கேணியில் கடந்த புதன்கிழமை இனந்தெரியாதோரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இளம் குடும்பஸ்தர், வவுனியா நலன்புரி நிலையமொன்றிலிருந்து மீள்குடியேற்றத்திற்காக அண்மையில் திரும்பியவர் எனத் தகவல்கள் மூலம் தெரிய வருகின்றது.

27 வயதான நடராஜா பாஸ்கரன் என்ற இந்நபர் ஏற்கனவே விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து விலகியிருந்தவர் என்றும் கூறப்படுகின்றது.

மீள் குடியேற்றத்திற்காக தனது சொந்தக் கிராமத்திற்கு திரும்பிய பின்பு ஒரு தடவை பொலிசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு விடுவிக்கப்பட்டிருந்தார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக அவரது உறவினர்கள் தேசிய நல்லிணக்க அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரனின் கவனத்திற்கும் கொண்டு வந்துள்ளனர்..