அங்குலான பிரதேசத்தில் இரண்டு கிளேமோர்கள் மீட்பு

Posted by muhiloosai muhiloosai
Options
மொரட்டுவ அங்குலான பிரதேசத்தில் இரண்டு கிளேமோர் குண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இன்று பிற்பகல் இவை இரண்டும் கண்டெடுக்கப்பட்டதாகப் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

சந்தேகத்தின் பேரில் கைதான விடுதலைப்புலி உறுப்பினர் ஒருவர் தெரிவித்த தகவலையடுத்தே இந்தக் கிளேமோர்கள் மீட்கப்பட்டதாக அவ்வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.